வழி கொடுத்தார் முருகன்.. மருதமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

published 2 years ago

வழி கொடுத்தார் முருகன்.. மருதமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் சாலை இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.

இதேபோல் சாமி தரிசனம் முடித்து விட்டு வந்து, அடிவாரத்தில் உள்ள பொம்மை கடைகளில் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளையும் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் விழாக்காலங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள்.

இதனால் மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது..

தொடர்ந்து நேற்று மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் அகற்றும் பணி  நடைபெற்றது.

இந்த பணியானது நொடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி, சாலை ஆய்வாளர் ஜாய் சுகன்யா மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் முன்னிலையில்  நடைபெற்றது.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலமாக மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதை விலாசமாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe