இன்று ராஜராஜ சோழன் பிறந்த நாள்.. தமிழக அரசு கவுரவம்.. !

published 2 years ago

இன்று ராஜராஜ சோழன் பிறந்த நாள்.. தமிழக அரசு கவுரவம்.. !

கோவை: மும்முடிச்சோழன் மாமன்னன் ராச ராச சோழன் 1037வது (பிறந்த நாள்) சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கோவை பேரூரில் ராச ராச சோழன் செப்புத் திருமேனி திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது.

நிகழ்வு முறை:

நாள்: 3/11/2022,  வியாழக்கிழமை 

நேரம்: மாலை 4.00 முதல்- இரவு 7.00 மணிவரை

நிகழுமிடம்: பேரூர் திருவாவடுதுறை ஆதினக் கிளை மடம்

இதனிடையே ராச ராச சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: 

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

மேலும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe