கோவையில் மழையில் வீடு இடிந்து விழுந்து சேதம்: தந்தை மகன் உயிர் தப்பினர்

published 2 years ago

கோவையில் மழையில் வீடு இடிந்து விழுந்து சேதம்: தந்தை மகன் உயிர் தப்பினர்

கோவை: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள சாஸ்திரி நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது, காரமடை சாஸ்திரி நகரில் வசித்து வரும் நடராஜ் என்பவரது வீட்டின் ஒரு பக்கச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், மற்றொரு பக்கச் சுற்றுச்சுவரும் எப்போது விழுமோ என்ற நிலையிலுள்ளது.

 கனமழையின் போது வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த நடராஜும், அவரது மகன் ரஞ்சித் குமாரும் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் உயிர் தப்பியுள்ளனர். அதனால் தங்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe