பொள்ளாச்சியில் மினி வேனில் 5000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

published 2 years ago

பொள்ளாச்சியில் மினி வேனில் 5000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

கோவை: தமிழக- கேரள எல்லை பகுதிகளில் கூடுதலாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக குடிமை பொருள் வழங்கல் போலீசார் பல்வேறு கட்டமாக வாகன சோதனை நடத்தி மோட்டார் சைக்கிளில், கார், மினி வேன், லாரிகளில் கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
 

கடந்த சில நாட்களாக,  போலீசார் கேரள எல்லைப்பகுதியான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 

சம்பவத்தன்று அதிகாலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி அபாஷ் குமார் உத்தரவுப்படி கோவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்  பரமேஸ்வரன் மற்றும் போலீசார் கோவை அருகே பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.
 

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் மொத்தம் 5000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
 

அதனை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குனியமுத்தூரை சேர்ந்த வல்லரசு (வயது 23) குறிச்சியை சேர்ந்த செந்தில்நாதன் (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது,
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரேஷன் அரிசி பதுக்குவோர், அவற்றை கடத்துவோர் குறித்து ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவோரை கையும் களவுமாக பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. 

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். என்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe