தமிழ்நாட்டை பஞ்சு தயாரிப்பில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்: ராசி சீட்ஸ் அலுவலக திறப்பு விழாவில் விவசாயத்துறை அமைச்சர் பேச்சு

published 2 years ago

தமிழ்நாட்டை பஞ்சு தயாரிப்பில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்: ராசி சீட்ஸ் அலுவலக திறப்பு விழாவில் விவசாயத்துறை அமைச்சர் பேச்சு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை : தமிழ்நாட்டை பஞ்சு தயாரிப்பில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும், பஞ்சு உற்பத்தி பரப்பளவு 3.5 லட்சம் ஏக்கரிலிருந்து 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் என்றும் ராசி சீட்ஸ் அலுவலக திறப்பு விழாவில் விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை புளியகுளம் பகுதியில் ராசி சீட்ஸ் தலைமை அலுவலகம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தெலுங்கான அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு, அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசுகையில், "தற்போது தமிழகம் பஞ்சு விலைச்சலில் நாட்டின் மூன்றவது இடத்தில் இருக்கிறது. அரசு தமிழ்நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல எல்லா முயர்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த ஆண்டில் தமிழக அரசு நெல் சாகுபடியை 5 லட்சம் ஏக்கர் அதிகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கும் நெல் வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாது.

இதே போல் மற்ற பயிர் வகைகளின் ஆற்றலை கூட்டும் பொருட்டிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சு விளைச்சல் பரப்பளவை 3.5 லட்சம் ஏக்கரிலிருந்து 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில், " விதைகளின் ஆற்றலை பெருக்க நுகர்வோர்-சார் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளை பொருத்து முயற்சிகள் செய்ய வேண்டும். நெல் வகைகள் பல உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை பெரும்பாலும் வீரியம் இல்லாமல் அழிந்து விட்டன. இவ்வாறு அழியாதவாறு சிறந்த குணங்கள் கொண்ட விதைகளை நாம் ஆராச்சியின் மூலம் உருவாக்கி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வழியில் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்." என்றார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், ராசி சீட்ஸ் நிர்வாக இயக்குனர் ராமசாமி, பேயர் இந்தியா லிமிடெட்டின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe