யாரை காவு வாங்க இந்த நிழற்குடை..? : அன்னூர் அருகே அபாயம்..

published 2 years ago

யாரை காவு வாங்க இந்த நிழற்குடை..? : அன்னூர் அருகே அபாயம்..

கோவை: அன்னூர் வட்டம், வடக்கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகலூர் பயணியர் நிழற்குடை ஆனது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிழற்குடையானது வடக்கலூர் கிராம அலுவலகத்திற்கு முன்பு உள்ளது.

ஊர் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வடக்கலூர் ஊரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் தங்களது குறைகளை சொல்வதற்கு வடக்கலூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கும், மற்றும் இங்கு செயல்படும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களது வீட்டிற்கு செல்வதற்கும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்

மேலும் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் கிராம மக்களும் இந்த பயணியை நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் பெய்து வரும் பருவமழை காரணமாக இந்த பயணிகள் நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை சுற்றி விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் அதிகப்படியான பருவ மழையின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்கி சுகாதாரம் கேடு விளைவிக்கும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளது. இந்த பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் அச்சத்தில் உள்ளனர். 

பொதுமக்கள் இப்போது பயணியர் நிழற்குடையை பயன்படுத்தாமல் தார் சாலையின் ஓரமாக நின்றும் கால் வலியின் காரணமாக தார் சாலையின் மேல் உட்கார்ந்தும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe