கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது

published 2 years ago

கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாகப் பிரிந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 12 டன் 350 கிலோ மாம்பழம் மற்றும் 2 டன் 350 கிலோ சாத்துக்குடி ஆகியற்றைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. 

அழிக்கப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe