புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் 'கோவை.கோ' நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவுபடுத்தியுள்ளது

published 2 years ago

புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் 'கோவை.கோ' நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவுபடுத்தியுள்ளது

கோவை: புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் 'கோவை.கோ' நிறுவனம் கோவை நவ இந்தியா பகுதியில் தனது அலுவலகத்தை விரிவுபடுத்தியுள்ளது.


கோவை.கோ நிறுவனம்  இந்தியாவில் கோயம்புத்தூர் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் ஆகிய இடங்களில் உள்ள முதன்மையான மென்பொருள் மற்றும் பி 2 பி சாஸ்  நிறுவனமானது, கோயம்புத்தூரில் 4,500 சதுர அடி அலுவலக இடத்தைத் திறந்துள்ளது.

இதன் தொடக்க விழாவில் கிஸ்ஃப்ளோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார்.  

புதிய நிறுவனத் தொடக்க விழாவில் 'கோவை டாட் கோ' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான சரவணகுமார் கூறுகையில், "தனிப்பட்ட குழுவாக செயல்படுபவர்கள் மற்றும் பங்குதாரர்கள் மனதில் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்கள் எளிதாக பணியாற்றுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவோம் என்ற வலுவான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது இந்த அலுவலகத்தை பார்க்கும் போது கோவை டாட் கோ நிறுவனம் சிறந்த பொருளை தயாரிக்கும் முடியும் இதன் மூலம் எங்கள் தரத்தை உணர முடியும்.

வாடிக்கையாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளில் எவ்வாறு பொருட்கள் தயார் செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இங்குள்ள பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு பணியாளர்கள் புரிந்து கொண்டு பணியாற்றுவார்கள் என்று நிறுவனம் நம்பிக்கை கொள்கிறது. எளிமையாகவும் விரைவாகவும் சாஸ் நிறுவனம்  பணியாற்றுவதால் தான் இந்தியாவில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம்.

இது அடுத்தகட்ட  நடவடிக்கைதான் சர்ன் 360. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் சாஸ் யூனிகான் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதில் டாக்குமெண்ட் 360, சர்வர்லஸ் 360, மற்றும் சர்ன் 360 ஆகியவை  விளங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். நாள்தோறும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சர்ன் 360, டாக்குமெண்ட் 360, சர்வர்லஸ் 360 ஆகியவை சாப்ட்வேர்கள் கோவை.கோ நிறுவனம் வாடிக்கையாளர் மனதில் நிரந்தர இடத்தை பிடிக்கும் பணியாளர்களின் திறமைகளையும் கற்றுக் கொள்ளும் திறமையும் மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்" இவ்வாறு அவர் கூறினார்.

27வது கனெக்ஷனுக்கான விடை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe