அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..! - அபாய நிலையில் வாழும் மக்கள்

published 2 years ago

அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..! - அபாய நிலையில் வாழும் மக்கள்

கோவை அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரியம்பாளையம் ஊராட்சியில் சுப்பிரமணிய கவுண்டன் புதூர் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 

தற்போது நீர்த் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேற்புறத்தில் 3 அடியில் அரசமரம் வளர்ந்துள்ளது. இதனால் இந்த நீர்நிலை தொட்டியை இப்பகுதி மக்கள் உடனடியாக இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியைக் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை தொட்டி அகற்றப்படவில்லை. இந்த நீர் நிலை தொட்டியின் அருகிலேயே குடியிருப்புகள் அமைந்துள்ளன. ஒருவேளை தொட்டி சரிந்துவிழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனைப் பார்வையிட்டு தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe