காசி தமிழ் சங்கமம்- 11வது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது

published 2 years ago

காசி தமிழ் சங்கமம்- 11வது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது

காசி தமிழ் சங்கமம்- 11வது ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டது.

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத் தொடர்பினை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 11வது குழுவினர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் புறப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 106 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று பயணத்தை துவங்கியுள்ளனர்.

நாட்டுப்புறக் கலைஞர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இக்குழுவில் பங்கேற்றுள்ளனர்.

 கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து நான்காவது மற்றும் கடைசி குழுவினர் இன்று அதிகாலை புறப்பட்டுள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார், கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில், அக்கட்சியினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள கோவையைச் சேர்ந்த கிராமிய இசைக் கலைஞர்கள் கும்மியாட்டம் ஆடி பயணிகளை உற்சாகப்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe