கோவை கங்கா நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா.

published 2 years ago

கோவை கங்கா நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா.

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில், இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அழகான மாலை ஏந்திய மாணவர்களின் அணிவகுப்புடனான  சிவப்பு கம்பள ஊர்வலம் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த இக்கண்கவர்  விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. கோவை கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜா சபாபதி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு  பட்டிமன்ற ராஜா என்று பிரபலமாக அறியப்படும் திரு சிம்சன் ராஜா அவர்கள்  சிறப்பு விருந்தினராகவும், டாக்டர் ஏஞ்சலா ஞானதுரை (திருச்சூர் ஜூபிலி மிஷன் நர்சிங் கல்லூரி முதல்வர்) கௌரவ  விருந்தினராகவும், அழைக்கப்பட்டிருந்தனர்.

திருமதி ராமா ராஜசேகரன் -அறங்காவலர், GIHS கங்கா கல்லூரியின் வளர்ச்சி பாதையை பற்றி விவரித்தார்.  Dr. எஸ்தர் ஜான் -  கல்லுரி முதல்வர் அவர்கள் புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை உரைக்க சுமார் 70 செவிலிய மாணவ மாணவிகள்  ஏற்றுரைத்தனர். Dr.பாலவேங்கடசுப்பிரமணியன்- கங்கா மருத்துவமனையின் கல்வி இயக்குநர்  பட்டமளிப்பு உறுதிமொழியை முன்மொழிய , அதைத் தொடர்ந்து சுமார் 700 பட்டதாரிகள் கௌரவ  ஆடை அணிந்து தொழில்முறை அர்ப்பணிப்புடன் உறுதிபூண்ட பின்னர் சிறப்பு விருந்தினர்களால் பட்டமளிப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது|


கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe