சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்..!

published 2 years ago

சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்..!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மன நலம்  குன்றிய 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காசியகம் மற்றும் பொள்ளாச்சி ஆழியர் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வாகனத்தை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த சுற்றுலாவுக்காக ரூ.10 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 4 வாகனங்களில் சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe