31 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலை: த.பெ.தி.க-வினர் கொண்டாட்டம்

published 2 years ago

31 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலை: த.பெ.தி.க-வினர் கொண்டாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பெரியார் பதிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் (த.பெ.தி.க) கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறுகையில், 

பேரறிவாளனின் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். செங்கொடி உயிர்த் தியாகம் செய்தார். இதையடுத்து தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலைக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், மாநில ஆளுநரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் பேரறிவாளன் மட்டும் விடுதலை ஆகவில்லை, மாநில உரிமைகளும் விடுதலை பெற்றுள்ளது. 

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பின் மூலம் கொட்டு வைத்துள்ளது. இத்தீர்ப்பினால் நாடு முழுவதும் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.”, என அவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe