ஊட்டியில் கொட்டி தீர்க்கும் உறைபனி - 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

published 2 years ago

ஊட்டியில் கொட்டி தீர்க்கும் உறைபனி - 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும்.

குளு, குளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.
இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது.

ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 24.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. அவலாஞ்சி அணை பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அவலாஞ்சி அணையில் உறைபனி காரணமாக தண்ணீர் ஆவியாக மாறியது.
நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது.
 

தற்போது தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள்  புற்கள் மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து காணப்படும் உறபனியை கையில் எடுத்து கண்டு ரசிக்கின்றனர். அதனை புகைப்படம் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe