அன்னூர் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: தாமதமாக வந்த பேருந்தால் மக்கள் போராட்டம்

published 2 years ago

அன்னூர் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: தாமதமாக வந்த பேருந்தால் மக்கள் போராட்டம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த நாரணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென, அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அரசுப் பேருந்து உக்கடம், ரெயில் நிலையம், காந்திபுரம், சரவணம்பட்டி வழியாக வடுகபாளையத்தைக் கடந்து வாகாரப்பாளையம் வரை செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாகக் காலையில் பேருந்து குறித்த நேரத்தில் வராமல் இருந்தது. இதனால் காலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் விஜயா, துணை- ஆய்வாளர் ஆனந்த், செல்வராஜ் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று நடைபெற இருந்த போராட்டத்தைக் கைவிடுமாறு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முன்பு போல பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe