கோவையில் லோக் அதாலத் மக்கள் தேசிய நீதிமன்றம் வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும்

published 2 years ago

கோவையில் லோக் அதாலத் மக்கள் தேசிய நீதிமன்றம் வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும்

கோவை: கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இது குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
"தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்து வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை நீதிமன்றத்து வளாகங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய, வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.

எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட நீதிமன்றத்து வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன. எனவே வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe