தமிழ்நாட்டில் ஆடிட்டிங் கல்வி மையமாகத் திகழும் கோவை மாநகர்

published 2 years ago

தமிழ்நாட்டில் ஆடிட்டிங் கல்வி மையமாகத் திகழும் கோவை மாநகர்

கோவை: பட்டய கணக்காளர் மையமாகக் கோவை திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் இக்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் கோவையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
"இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பட்டயக் கணக்காளர் கல்வி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடங்கித் தேர்வுகளை நடத்துவது,

பட்டயக் கணக்காளராக பணியாற்றத் தொடங்கிய பின் தேவையான பயிற்சிகளை அளித்தல், பணியைக் கண்காணித்தல், தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பட்டயக் கணக்காளர்களின் தேவை அதிகம் உள்ளது. எனவே, எத்தனை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றாலும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாகக் கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசுடன் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பட்டய கணக்காளர் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் சென்னையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென பிரத்தியேக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,இத்திட்டத்தால் இன்று கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்தியில் பட்டய கணக்காளர் கல்வி குறித்த விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் உள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர். 
இதில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள். நாட்டில் மொத்தம் பணியாற்றும் பட்டய கணக்காளர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதால் பட்டய கணக்காளர் கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பட்டய கணக்காளர் கல்வியின் மையமாகக் கோவை திகழ்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் மாணவ, மாணவிகள் பலர் கோவையில் தங்கி பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்குப் பட்டயக் கணக்காளர் கல்வி மேற்கொள்ள இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி திட்டங்கள் உள்ளன." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe