கோவையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

published 2 years ago

கோவையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில்  கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை  காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள 2.750 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 22.5 கிலோ எடை கொண்ட 4 ஆயிரம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மகேஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். 

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe