தொழுநோய் குறைந்த மாவட்டமாகக் கோவை மாவட்டம் தேர்வு: விருதுக்கு வாய்ப்பு

published 2 years ago

தொழுநோய் குறைந்த மாவட்டமாகக் கோவை மாவட்டம் தேர்வு: விருதுக்கு வாய்ப்பு

கோவை: தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டமாகக் கோவைக்கு விருது பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொழுநோயானது பல்வேறு நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவையும் தொழுநோய் இல்லாத நாடாக மாற்ற மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டங்களைத் தேர்வு செய்து விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டமாகக் கோவை கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட தொழுநோய் ஒழிப்புத் துறை துணை இயக்குநர் சிவக்குமாரி கூறியதாவது:
"தொழுநோய் பாதிப்பு குறித்து எங்கள் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் மூலம் கணக்கீடு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது, 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு, 67 பேர் குணமடைந்துள்ளனர்.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் தொழுநோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழுநோய் குறைந்த முதல் மாவட்டமாகக் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். இதற்குக் கடந்த, 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மத்திய சுகாதாரத் துறையிடம் அளிக்க வேண்டும்.

இதையடுத்து, டெல்லியில், சுகாதாரத் துறை அமைச்சகம் மூலம் விருது வழங்கப்படும். விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிற மாவட்டங்களைப் பொறுத்தவரைக் கோவையில் தான் பாதிப்பு குறைவாக உள்ளது. இதன் மூலம் நமக்கு விருது கிடைக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe