கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா செலவு செய்யுங்க... சிறுவாணி மட்டம் குறையுது..!

published 2 years ago

கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா செலவு செய்யுங்க... சிறுவாணி மட்டம் குறையுது..!

கோவை:சிறுவாணி அணையின் நீர் மட்டம், 19.5 அடியாக சரிந்து, குடிநீர் வினியோக இடைவெளி, ஒன்பது நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. நேற்று, 19.5 அடிக்கு தண்ணீர் இருந்தது.


இரு மாநில ஒப்பந்தத்தின்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காக தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரளா தர வேண்டும். சில ஆண்டுகளாக, 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்க கேரள அரசு அனுமதிக்கிறது. பருவமழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேங்காது, கூடுதல் தண்ணீரை கேரள பொதுப்பணித்துறையினர் ஆற்றில் வெளியேற்றுகின்றனர்.

இதன் காரணமாக, கோடை காலங்களில் கோவை மாநகராட்சிக்கும், வழியோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் விதமாக குடிநீர் வினியோக இடைவெளியும் அதிகரிக்கப்படுகிறது. தற்போது, இரண்டாவது வால்வு தெரியும் வகையில் தண்ணீர் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக, 6.3 கோடி லிட்டர் எடுக்கப்படுகிறது.

மேலும், ஏழு முதல், ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை என, குடிநீர் வினியோக இடைவெளியும் அதிகரித்துவருகிறது.

மே மாதத்தில் வழக்கமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதுாக்கும். இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க, ஒப்பந்தப்படி கேரள அரசு தண்ணீர் தரவும், தண்ணீரை வெளியேற்றுவதைத் தடுக்கவும், தமிழக அரசு, கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சிக்கனம் தேவை

மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,''குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக, பில்லுார்-3 குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மழை பெய்தால்தான் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரும். எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe