கோவையில் வெப்பநிலை எகிறும் - வேளாண் பல்கலை

published 2 years ago

கோவையில் வெப்பநிலை எகிறும் - வேளாண் பல்கலை

கோவை: கோவையில் வெப்பநிலை எகிறும் என்று விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகம்  அறிவுறுத்தியுள்ளது 

எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது.

பகல் நேர, இரவு நேர வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதால் நடவு செய்யப்பட்ட நவரை பருவ நெல் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி வர வாய்ப்புள்ளது.


இதனை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு, 100 கிராம் தயோமீத்தாக்ஸிம் மருந்தினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மேற்கு வேளாண் மண்டலத்தில் வறண்ட காற்றானது 4-8 கி.மீ., வரை வீச வாய்ப்புள்ளதால், ஐந்து மாதங்களுக்கு மேலான வாழை மரங்களுக்கு போதிய முட்டுக்கொடுக்கவேண்டும்.

வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ராணிகட் நோய் வரவாய்ப்புள்ளதால், அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தகுந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

வெப்பநிலை அதிகம் உள்ளதால், கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு, தீவனத்துடன் 50 கிராம் டானுவாஸ் ஸ்மாட் தாது உப்பு கலவையை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்கவேண்டும். குடிநீரை போதிய அளவு வழங்கவேண்டும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe