பெட்ரோல் டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு

published 2 years ago

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

புது டெல்லி: பெட்ரோல் மீது ரூ. 8ம், டீசல் மீது ரூ. 6ம் மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்படுகிறது.  இதனால் பெட்ரோல் விலையில் ரூ. 9.50ம், டீசல் விலையில் ரூ. 7ம் குறையும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

இப்போதைய விலை குறைப்பின் எதிரொலியாக பெட்ரோலின் மீதான மத்திய அரசின் வரி லிட்டருக்கு ரூ. 19.90 மற்றும் டீசலின் வரி லிட்டருக்கு ரூ. 15.80 ஆக இருக்கும். இந்த வரி குறைப்பினால் மத்திய அரசிற்க்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) ₹ 200 மானியமாக வழங்குவோம் என்று மேலும் தெரிவித்துள்ளார். இந்த மானியத்தை வழங்குவதற்க்காக  மத்திய அரசின் செலவினம் ரூ. 6 ஆயிரத்து 100 கோடி ஆகும். 

“இது நம் அம்மாகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும் உதவும்.” என ட்விட்டெரில் பதிவிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.

மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விலை குறைப்பை எல்லா மாநிலங்களும் மேற்கொண்டு பொது மக்களின் சுமையைக் குறைக்குமாறு பரிந்துரை வழங்கியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe