'மண் காப்போம்' இயக்கத்திற்கு நடிகர் அர்ஜுன் ஆதரவு

published 2 years ago

'மண் காப்போம்' இயக்கத்திற்கு நடிகர் அர்ஜுன் ஆதரவு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

"மண்ணைச் சேமிப்பது உங்கள் சொந்த குடும்பத்தையும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவதற்குச் சமம்", என நடிகர் திரு அர்ஜுன் அவர்கள் மண் காப்பதன் அவசியம் குறித்துத் தெரிவித்துள்ளார்.

சத்குரு அவர்கள் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு அனைத்து நாடுகளைச்சேர்ந்த அனைத்து துறை பிரபலங்களும் பொதுமக்களும் பேராதரவு தந்து வருகின்றனர். இந்தியாவின், தமிழகத்தின் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விஞ்ஞானிகள், தொழில்துறையைச் சார்ந்தவர்களும் ஆதரவு தந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி வருகின்றனர்.

அதன் வரிசையில், நடிகர் திரு அர்ஜுன் அவர்கள், இந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவினை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

"ஒரு பேரழிவோ அல்லது எந்த ஒரு நெருக்கடியோ, அதை நடைபெறாமல் தடுக்க சிறந்த வழி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதே.

இப்போது ஒரு பெரிய உலகளாவிய நெருக்கடி 'பாலைவனமாக்கல்' ஆகும். நமது தாய் பூமியின் வளமான, இயற்கையான கரிம மண் அதன் நுண்ணுயிரிகளையும் முக்கிய உயிரினங்களையும் இழந்து வெறும் மணலாக மாறுகிறது.

நம்முடைய வணிக விவசாய நடைமுறைகள், பல ஆண்டுகளாகப் பாலைவனமாக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் அது மிக விரைவில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக மாறும். பிறகு,  உணவை வளர்ப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.
மண் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும், கிரகத்திற்கும் உயிர்வாழ மிக முக்கியமான ஒன்றாகும். இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், இந்த பெரிய நெருக்கடிக்கான நிலையையும், தீர்வுகளையும் பரப்ப உதவுவோம். இது இந்த கிரகத்தைக் காப்பாற்ற உதவுவது மட்டுமல்லாமல், அடிப்படையில் இதை நமக்காகச் செய்கிறோம். நமக்காகவும் நமது அடுத்த தலைமுறைக்காகவும் செய்கிறோம்." எனப் பகிர்ந்துள்ளார்.

மார்ச் 21-ம் தேதி லண்டனிலிருந்து ‘மண் காப்போம்’ பயணத்தைத் தொடங்கிய சத்குரு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளை அடைந்துள்ளார். இவ்வியக்கம் உலகளவில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து சிறப்பான ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe