கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

published 1 year ago

கோவையில்  கொரோனா தொற்று அதிகரிப்பு

கோவை:  கோவையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டாத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கோவையில்  நேற்று முன்தினம் ஒரே நாளில் 572 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 58 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe