கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு

published 1 year ago

கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கோவை: தமிழகம்  முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக  இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு அறிவுறுத்தியது. நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைத்து ஊரகப்பகுதி களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி, பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகின்றன.


இதன் மூலமாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளன. கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ கடந்துள்ளது. கடந்த 15-ந் தேதி 1.5 சதவீதமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 129 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மட்டுமே 100-ஐ கடந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதையொட்டி பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி அதிகரிக்கப்பட்டு உள்ள கொரோனா பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த காலங்களை போல பயப்படும் அளவில் பாதிப்பில்லை. இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்பான வழிகாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe