பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் 26-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்: 65 கிராம மக்கள் கோரிக்கை மனு

published 2 years ago

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் 26-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்: 65 கிராம மக்கள் கோரிக்கை மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா உள்வட்டத்திற்கு உட்பட்ட 65 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாகக் கொடுக்க வசதியாக, அதற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 26-ந் தேதி (வியாழக்கிழமை) தாலுகா அலுவலகத்தில் தொடங்குகிறது.

அன்று ராமபட்டிணம் சுற்றுவட்டார கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார்.

இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்திற்கும், 31-ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்திற்கும், ஜூன் 1-ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டத்திற்கும், 2-ம் தேதி கோலார்பட்டி உள்வட்ட மக்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

இதேபோல் வருகிற 26-ம் தேதி ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை உள்வட்டத்துக்கும், 27-ம் தேதி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம், 31-ம் தேதி கோட்டூர். உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

இந்த ஜமாபந்தியின்போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது,
"பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் வருகிற 26-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள், தீர்க்கப்பட்டுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து முழு ஆய்வு நடத்தப்படும்.", என்று தெரிவித்தனர்.

தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கப்பட உள்ளதால் ஆவணங்களைத் தயார் செய்யும் பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe