போதை பொருளை பயன்படுத்தினால் இளமையை இழக்க நேரிடும் போலீஸ் கமிஷனர் பேச்சு.

published 1 year ago

போதை பொருளை பயன்படுத்தினால் இளமையை இழக்க நேரிடும் போலீஸ் கமிஷனர் பேச்சு.

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது.

அதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசு கலைக்கல்லூரியிலும் போதை பொருள் ஒழிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை மாநகர போலீஸ் சார்பில் கல்லூரிகளுடன் இணைந்து, போதை பொருளின் தீமை குறித்து விளக்கமாக எடுத்து கூறி வருகிறோம்.

போதை என்பது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி நாம் அனைவரும் தற்போது இது குறித்து பேசி வருகிறோம். இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போதை பொருளாக இருந்தாலும் சரி, ரவுடியிசமாக இருந்தாலும் சரி போலீஸ் பார்த்து கொண்டு இருக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தும் போது, நமது இளமை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.

எனவே நீங்களே இந்த பழக்கம் உங்களுக்கு தேவையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது அதன்படி கோவையில் கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் ஆண்கள் 
தான் ரவுடி மற்றும் போதை பழக்கத்தில் இருந்தனர்.

தற்போது ஒரு சில பெண்களும் ரவுடியிசம் மற்றும் போதை பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் வருந்ததக்க கூடிய விஷயமாகும்.போதை மற்றும் ரவுடியிசம் என வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரே நடவடிக்கை தான். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்யும்.

கோவையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். யார் யார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரமும் சேகரித்து வைத்துள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe