கோவையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை

published 1 year ago

கோவையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதலே கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து மிதமான கால நிலையே நிலவி வந்தது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தாலும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் மாலையில் கோவை மாநகர் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

காந்திபுரம், ராமநாதபுரம், பீளமேடு, ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இதில் காந்திபுரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, அரசு மருத்துவமனை சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

மழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேங்கிய நீரில் சிக்கி வெளியே வர முடியால் தவித்தது. அவினாசி ரோடு லட்சுமி மில் பகுதி, அரசு ஆஸ்பத்திரி லங்கா கார்னர் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் கருப்பாக ஓடியது. 

இதனால் அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது. லங்கா கார்னர், குட்ஸ் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீரை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. 

இந்த மழைக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நின்றிருந்த மூங்கில் மரம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர். 

அன்னூர் அடுத்த தெலுங்குபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் தெலுங்கு பாளையம், பிள்ளையப்பம் பாளையம் பகுதிகளில் ஓட்டு வீடுகள், சிமெண்ட் சீட் வீடுகள், குடிசை வீடுகள் என 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன. 

மேலும் சில இடங்களில் வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை யோரத்தில் மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe