கோவையில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்க தனி பெஞ்ச்- குழந்தைகள் உரிமை ஆணையம்

published 1 year ago

கோவையில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்க தனி பெஞ்ச்- குழந்தைகள் உரிமை ஆணையம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க விரைவில் தனி பெஞ்ச் அமைக்கப்பட உள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மார்ச் 26 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் ஐந்து மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோவையில் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆப் (app) மூலம் கண்காணிக்கிறோம். இதுவரை 14 இடங்களில் ஆய்வு முடிந்தது. அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கோவையைப் பொறுத்தவரை கூர் நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறையினர் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற தலைப்பில் மாணவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். கோவையில் குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. இதுவரை  250 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மதமாற்றம், போதைப் பொருள் தொடர்பாக அதிகமான புகார்கள் வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிளாக் ரிவ்யூ செய்வோம்.

கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் தங்களின் குறைகளை தெரிவிக்க விரைவில் தனி பெஞ்ச் அமைக்கப்படும். கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 4 ஆலோசகர்கள் உள்ளனர். நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் இணைந்த இந்த கூர்நோக்கு இல்ல அறிக்கையை நாங்கள் கடிதம் மூலமாக ஆட்சியருக்கு பின்னர் தருவோம்." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe