தமிழ் புத்தாண்டு 2023: இந்த ஆண்டோட பெயர், சிறப்புகள் என்ன தெரியுமா உங்களுக்கு...?!

published 1 year ago

தமிழ் புத்தாண்டு 2023: இந்த ஆண்டோட பெயர், சிறப்புகள் என்ன தெரியுமா உங்களுக்கு...?!

14/4/2023, வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் இந்த வருடம் பிறந்துள்ளது. இந்த வருடம் சென்ற ஆண்டை காட்டிலும் பலருக்கு நன்மையை அளிக்கும் வகையிலான நல்ல நேரத்தில் தொடங்கியுள்ளது.

தமிழ் வருடமானது சூரியன் அசுவினி நட்சத்திர முதல் பாதத்தில் நுழையும் நாளிலிருந்து தொடங்கும். வருடம் பிறக்கும் நேரம் சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சௌரமானம் எனப்படும் விதியால் கணக்கிடப்படுகிறது.

இந்த வருஷத்திற்கு ராஜாவாக அமைந்துள்ள கிரகம் புதன் (கல்வி) மற்றும் மந்திரியாக அமைந்துள்ளது சுக்கிரன் (நல்லதை செய்பவன்). இந்த வருடம் பொதுவாக எல்லோருக்குமே எல்லா நன்மைகளையும் பெற்று தரும் என இலக்கணக் குறிப்புகள் கூறுகின்றன. 

இந்த சிறப்பு மிக்க ஆண்டின் பெயர் என்ன தெரியுமா…?! 

சோபக்ருது

சோபக்ருது என்பதற்கு மங்களம் எனப் பொருள். தமிழ் ஆண்டுகள் 60-வதனுள் 37-வது ஆண்டு இது. 36-வது ஆண்டான சுபக்ருது ஆண்டு நிறைவடைந்து நாம் இன்று சோபக்ருது ஆண்டினுள் நுழைந்துள்ளோம்.

இந்த ஆண்டிற்கான பாடல்:

சோபக்ருது தன்னிற் றொல்லுவகெல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும் சோபனங்கள் உண்டாகு மாரி யொழியாமற் பெய்யு
மெல்லாம்  உண்டாகுமென்றே உரை

இந்த பாடல், சோபக்ருது வருடத்தில் உலகிலுள்ள பழம் பெரும் ஊர்களெல்லாம் சிறப்புறும் என்றும் கோபம், பொறாமை நீங்கும், ஒற்றுமை மேலோங்கும், சுப நிகழ்ச்சிகள் நடக்கும், மழை பெய்யும் என்றும் எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என்றும் கூறுகிறது.

தமிழ் புத்தாண்டின் வருகை நம் இல்லத்திற்கு ஒரு மங்கை வருவதை போன்றது என்பதால், அந்த மங்கையின் வருகையை நோக்கி, முதல் நாள் இரவிலே வீட்டை சுத்தம் செய்து, பழங்கள், காய்கறிகள், மலர்கள், வெற்றிலை- பாக்கு தாம்பூலம், தங்க- வெள்ளி நகைகள், பணம், அரிசி, பருப்பு மற்றும் அறுசுவைகளான உப்பு, வெல்லம், மாங்காய், நெல்லிக்கனி, இஞ்சி, வேப்பம் பூ ஆகியவற்றை லட்சுமியாகக் கருதப்படும் கண்ணாடியின் முன் பூஜை அறையில் வைத்து, வீட்டின் முன் மாவிலை தோரணம் கட்டி சிறப்பு வழிபாடு நடத்துவது தமிழர் வழக்கம். 

முதல் நாள் இரவே எடுத்து வைக்கப்பட்ட இந்த காட்சியை காலையில் எழுந்த உடன் கண்டு, இங்கு நிறைந்துள்ள வளங்களைப் போல் இந்த ஆண்டும் வளமாக அமையுமாறு வழிபாடு செய்து, சுற்றத்தாறுக்கு வாழ்த்து கூறுவதும் வழக்கம். தமிழ் புத்தாண்டின் உணவுப்பட்டியலில் இன்றியமையாத ஒன்று இந்த கால நிலைக்கு ஏற்ற பாதி பழுத்த மாங்கனியில் செய்யப்படும் மாங்காய் பச்சடி ஆகும். 

மாங்காய் பச்சடியின் செய்முறையைக் காண: https://newsclouds.in/news/5/tamil_new_year_special_managai_pachadi

இந்த தனித்துவமான வழிபாடு முறையுடன் வரவேற்கப்பட்ட சிறந்த ஆண்டான சோபக்ருது வருடம் அனைவருக்கும் மன நிறைவை அளிக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe