கோவை பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்த பொதுமக்கள்

published 1 year ago

கோவை பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்த பொதுமக்கள்

கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதை அடுத்து, போராட்ட குழுவினர் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அம்மனுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர். அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனதை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

அதில் ஒன்றாக அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள், மேட்டுப்பாளையம் அடுத்த வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து சென்றனர். அந்தந்த கிராமங்களில் கோவிலில் உள்ள அம்மன் சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என 8 ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி, அன்னூர் தாலுகாவை சேர்ந்த ராய்கவுண்டன்புதூர், வடுகனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு வந்தனர். 

ஆற்றில் தீர்த்தம் எடுத்து குடத்திற்கு மாலையிட்டு பூஜை செய்தனர். பின்பு விநாயகர், வனபத்ரகாளியம்மனை வழிபட்டனர். பின்னர் அவரவர் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe