என்னடா நடக்குது இங்க…! சிறுவனை கூண்டுக்குள் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வைரல்... - VIDEO

published 1 year ago

என்னடா நடக்குது இங்க…! சிறுவனை கூண்டுக்குள் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வைரல்... - VIDEO

பறவைகளை கூண்டில் அடைத்து எடுத்து செல்வது போல் சிறுவனை கூண்டுல் அடைத்து வாகனத்தில் பயணிக்கும் வைரல் காட்சிகள்.

கோவை உக்கடம்- ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில்  குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண லிங்க்-ஐ சொடுக்கவும் : https://www.youtube.com/shorts/8ggfpD3K_ZI

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe