மாயமான 130 செல்போன்களை மீட்ட கோவை போலீஸ்..!

published 2 years ago

மாயமான 130 செல்போன்களை மீட்ட கோவை போலீஸ்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போன 130 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போவது மற்றும் திருட்டு சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்படுகின்ற புகார்களின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன்களை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்பி பத்ரிநாராயணன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொது இடங்கள், கல்யாண வீடு மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது செல்போன்களை பொதுமக்கள் தவற விடுகின்றனர். அதன்படி, பெறப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் பிரிவு மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 130 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான அந்த செல்போன்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் ரூ.17,12,830 மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.20,55,006 மதிப்புள்ள  2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1192 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

57 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39,83,100 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 18 மற்றும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும் 18 வழக்குகள் நீதிமன்ற கோப்புக்கும் எடுக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை சார்பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான 119 விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe