கோவையில் கடும் வெயிலினால் பண்ணைகளில் கோழிகள் இறப்பு..

published 1 year ago

கோவையில் கடும் வெயிலினால் பண்ணைகளில் கோழிகள் இறப்பு..

கோவை: கோடை வெயில் தாக்கம் காரணமாக, பண்ணைகளில், கறிக்கோழிகள் 10 சதவீதம் வரை இறக்கின்றன. பண்ணைகளைக் குளுமையாகப் பராமரிப்பதன் வாயிலாகக் கறிக்கோழி இறப்பு எண்ணிக்கையைத் தடுக்க முடியும்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம், தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன; தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கோடை வெயில் தாக்கம் காரணமாக, கோழிகள் அதிகளவில் இறக்கின்றன. பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாகக் கோடை வெயில் காலத்தில், கோழிகளின் எடை குறைகிறது. தற்போது, ரம்ஜான் பண்டிகை காரணமாகக் கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்துள்ளது.

கோடை வெயில் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொறுத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இருக்கும். வெப்ப அலற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்குக் காரணமாகிறது.

இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்கப் பண்ணைகளைக் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பண்ணையைச் சுற்றி மரங்கள் வளர்த்தல் என, தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe