கோவையில் முதல்முறையாக ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வாங்கிய குழந்தை..!

published 2 years ago

கோவையில் முதல்முறையாக ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வாங்கிய குழந்தை..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை கே.கே.புதூரைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக், 33, தனது மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினார்.

விண்ணப்பத்தில், ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. இதனால், பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு, ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற முயன்றார். வருவாய்த் துறை முதல் முறையாக இந்த சான்றிதழை வழங்கியுள்ளது. 
இது குறித்து நரேஷ் கார்த்திக் கூறியதாவது: பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஜாதி, மதம் குறித்துக் குறிப்பிடத் தேவையில்லை என, 1973ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய்த் துறையினரைச் சந்தித்துப் பேசியபோது அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. கோவை ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு வட்டாட்சியரைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளேன்.புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்கக் காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் குழந்தைகளுக்குச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும்".

இவ்வாறு, அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe