கோவையில் மீண்டும் துவங்கியது ஹேப்பி ஸ்ட்ரீட்.. ஆடிப்பாடி கொண்டாடிய பொதுமக்கள்

published 1 year ago

கோவையில் மீண்டும் துவங்கியது ஹேப்பி ஸ்ட்ரீட்.. ஆடிப்பாடி கொண்டாடிய பொதுமக்கள்

ஆர் எஸ் புரம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றதால் மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பழங்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

கோவை மாநகராட்சி, காவல் துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இதில் பல்வேறு பழங்கால விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை  மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

மேலும் இதில் ஓவியர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோரும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதன்படி ஞாயிறன்று  ஆர்.எஸ்.புரம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பழங்கால விளையாட்டுக்களான பம்பரம், கோலி குண்டு, டயர் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் விளையாடினர். 

மேலும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் குறித்த வீடியோவை இந்த லிங்க் மூலமாக காணுங்கள் - https://youtu.be/CUMOAIpw2l8

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe