கலவரங்களை கட்டுப்படுத்த கோவையில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஓத்திகை

published 1 year ago

கலவரங்களை கட்டுப்படுத்த கோவையில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஓத்திகை

கலவரங்கள் நிகழும் போது ட்ரோன் மூலம்  கண்ணீர் புகைகுண்டு  வீசி கலைப்பது குறித்தான ஒத்திகை நிகழ்வு இன்று  நடத்தப்பட்டது.

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி 
கலவர சூழல்களில் கூட்டத்தை  கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

 கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த  ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல செயல்பட்டனர். இதில் அவர்களை நோக்கி டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வை  பார்வையிட்ட பின்னர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும் எனவும் , ஒரே நேரத்தில் நான்கு கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், இரண்டு நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள  முடியும் எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்த ட்ரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe