கோவை மாவட்டத்தின் அழகிய புகைப்படங்கள் இருக்கா..? வாங்க புகைப்பட போட்டிக்கு..! ஆட்சியர் அழைப்பு

published 1 year ago

கோவை மாவட்டத்தின் அழகிய புகைப்படங்கள் இருக்கா..? வாங்க புகைப்பட போட்டிக்கு..! ஆட்சியர் அழைப்பு

வால்பாறை கோடை விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் இயற்கை, பண்பாடு, வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களைக் கொண்டு ஆன்லைன் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

வால்பாறை கோடை விழா 2023 முன்னிட்டு ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வால்பாறை கோடை விழா 2023 வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இவ்விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது. புகைப்படங்களின் கருத்து (Theme) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

1. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாவரங்கள்/விலங்குகள்,

2. கோயம்புத்தூர் மாவட்டத்தின் கலை/பண்பாடு/விழாக்கள்

3. கோயம்புத்தூர் மாவட்டத்தின் இயற்கைக் காட்சிகள்/வரலாற்றுச் சின்னங்கள்

போட்டியாளர்கள் தங்களது புகைப்படங்களை jpg வடிவில் (jpg format) 25ம் தேதி இரவு 10 மணிக்குள் தங்களது விவரங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படங்களை அனுப்பிட வேண்டும்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000மும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் கோடை விழாவின் புகைப்படக் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe