கோவை தனியார் மருத்துவமனையில் 81 செவிலியர்களுக்கு வாந்தி, மயக்கம்

published 1 year ago

கோவை தனியார் மருத்துவமனையில்   81 செவிலியர்களுக்கு வாந்தி, மயக்கம்

கோவை:கோவையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் 100- க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பல செவிலியர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

 இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

3 நாட்கள் நடைபெற்ற பரிசோதனை முகாமில் மொத்தம் 81 செவிலியர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.  மருத்துவமனையில் குடிநீர் வழங்கும் இடங்களில் நீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

இதேபோல, அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆய்வின் முடிவில்தான் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும்''.

என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe