மழைக்காலம் வருது.. உங்க பகுதியில் கட்டிடம் மோசமா இருக்கா..? உடனே தகவல் கொடுங்க...!

published 1 year ago

மழைக்காலம் வருது.. உங்க பகுதியில் கட்டிடம் மோசமா இருக்கா..?  உடனே தகவல் கொடுங்க...!

கோவை: மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் உங்கள் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள், விழும் நிலையில் உள்ள மரங்க்ள் மற்றும் மின்கம்பங்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டு 2023ல் ஜூன் மாதம் பிற்பகுதியில் அல்லது இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவமழையின்போது பழுதடைந்து இழந்து கீழே விழக்கூடிய வாய்ப்புள்ள அல்லது தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள அரசு / தனியார் கட்டிடங்கள், கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பங்கள் ஆகியவை குறித்த ஏதேனும் தங்கள் பகுதிகளில் இருப்பின் அதுகுறித்த விபரங்களை தெரிவிக்கலாம்.

இது குறித்த விவரங்களை கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் (WhatsApp - 8190000100) எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். 

பொதுமக்கள் பகிரும் தகவல்களானது, எதிர்வரும் மழைக்காலத்தில் கோவை மாநகரக் காவல்துறையானது கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இடையூறில்லா வாகனப் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதற்கு உதவிகரமாக அமையும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe