குறிச்சி பிரிவு மக்களின் 45 ஆண்டுகால கனவு நிறைவேறியது..!

published 1 year ago

குறிச்சி பிரிவு மக்களின் 45 ஆண்டுகால கனவு நிறைவேறியது..!

கோவை: தமிழ்நாட்டில் புதிதாக 500 நல்வாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 95வது வார்டுக்குட்பட்ட குறிச்சி பிரிவு-என்.பி. இட்டேரி பகுதியில் நகர்புற நல்வாழ்வு மையம் திறக்கப்பட்டது.

45 ஆண்டுகளாக இப்பகுதியில் மருத்துவமனை இல்லாத குறை நீங்கி தங்களது கனவு நிறைவேறியது என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.


இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில்,

‘‘இப்பகுதியில் உள்ள பெண்கள் கர்ப்பக கால சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை இருந்தது. இப்பகுதியில் இருந்து பேருந்து அல்லது ஆட்டோக்கள் மூலமாக சென்று வர வேண்டிய நிலை இருந்தது. மேலும் இதற்காக போக்குவரத்து செலவாக ரூ.150 செலவு ஆனது. ஆனால் தற்போது அந்த அலைச்சல், போக்குவரத்து செலவு மிச்சம் ஆனது. அதேபோல் இப்பகுதியில் இருப்போர் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள்தான்.

அரசு மருத்துவமனைக்கு சென்று வர ஒருநாள் விடுப்பு எடுத்துவிட்டுதான் சென்று வர வேண்டியது இருந்தது. ஆனால் இனி அது தேவைப்படாது.

பெரியவர்கள் இனி சிரமம் பட தேவையில்லை. யார் துணையும் இன்றி அவர்கள் வீடு அருகில் உள்ள இந்த நல்வாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று அவர்களாகவே வீட்டிற்கு தனியாக வந்துவிடுவார்கள். பெண்கள் மத்தியில் இந்த மையம் எங்களுக்கு தைரியத்தை கொடுத்துள்ளது. 45 ஆண்டுகால கணவு நிறைவேறியது. தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என்றனர்.


இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையம் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல், உபகரணங்கள் தேவை என மேலும் ரூ.20 லட்சம் வரை செலவு செய்யப்பட உள்ளது.

95வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 3 ஆயிரம் குடும்பங்களின் மருத்துவ தேவையை இந்த நல்வாழ்வு மையம் பூர்த்தி செய்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இப்பகுதியில் நல்வாழ்வு மையம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் 45 ஆண்டு கால கணவை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி என 95வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஏ.காதர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe