கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்.. தேதி அறிவிப்பு

published 1 year ago

கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்.. தேதி அறிவிப்பு

கோவை:காவல்துறையினர்  பயன்படுத்திய வாகனங்கள் வரும் 17ம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்

மாவட்ட எஸ்.பி கூறியுள்ளதாவது:

கோவை மாவட்ட போலீஸில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர 6 இரு சக்கர வாகனங்கள் பி.ஆர்.எஸ் மைதானத்தில், 17ம் தேதி காலை 10.00 மணிக்கு ஏலம் விடப்படவுள்ளன ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஏலம் எடுக்க விரும்புவோர் இன்று முதல் வாகனங்களைப் பார்வையிடலாம்.

ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 16ம் தேதி இரு சக்கர வாகனத்துக்கு, ரூ.1000 மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ200 முன்பணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்.

 ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகையை ஜி.எஸ்.டி.யுடன் அன்றே செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

மேலும், விவரங்களுக்கு 83000 61781 9442864108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe