முதலமைச்சர் பேச்சுக்கு வானதி சீனிவாசன் பதில்...

published 1 year ago

முதலமைச்சர் பேச்சுக்கு வானதி சீனிவாசன் பதில்...

கோவை: தமிழர் பிரதமராக  வாய்ப்புகள் வந்த போது அதைத் தடுத்து நிறுத்தியது திமுக தான்- முதலமைச்சர் பேச்சுக்கு வானதி சீனிவாசன் பதில்...

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது  அமித்ஷா குறித்து முதல்வர் ஸ்டாலின் மேட்டூரில் அளித்த பேட்டி குறித்துப் பேசினார்.

அப்போது  இதற்கு முன்பு தமிழர் பிரதமராக  வாய்ப்புகள் வந்த போது அதைத் தடுத்து நிறுத்தியது திமுக  எனவும் மூப்பனார் பிரதமர் ஆவதை  திமுக ஆதரிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.மேட்டூரில் குறிப்பிட்ட காலத்திற்குத்  தண்ணீரைத் திறக்க காரணம் மோடிதான் எனத் தெரிவித்த அவர்,
வேளாண் பட்ஜெட்டை முதன்முதலில் கொண்டு வந்ததும் பா.ஜ.கதான் எனவும் எல்.முருகன், தமிழிசை ஆகியோரை பா.ஜ.க பிரமாக்கலாம் என்று முதல்வர்  சொல்லி இருக்கின்றார் எனக் கூறியவர்

சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியது பா.ஜ.க எனவும் பட்டியல் இனத்தவரை தமிழக துணை முதல்வராக்க வேண்டும் என்று  பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி  வருகின்றது எனவும்

9"ஆண்டு காலமாகத்  தமிழகத்திற்கு பா.ஜ.க  எதுவும் செய்ய வில்லை எனச் சொல்கின்றனர் - தமிழகத்தில் சிறப்புத் திட்டங்கள் இல்லை என்று சொல்லி இருக்கின்றார்,  உண்மைதான் எனவும் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வந்த போது கருப்பு பலூன் பறக்க  விட்டீர்கள் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்தார்.

டிபன்ஸ் காரிடர் என்ற சிறப்புத் திட்டம் தமிழகம், 
உ.பி ஆகிய இரு  மாநிலங்களுக்கு  மட்டுமே கொடுக்கப்பட்டது எனவும்,  பா.ஜ.க கொண்டு வந்த  சிறப்புத் திட்டங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாது என முதல்வரை விமர்சித்த வானதி,9 ஆண்டுக் காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பதைத் தினமும் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம், அது உங்களுக்குப் புரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் லபேல் ஊழல் விவகாரம் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர்,
தமிழர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தேசிய தலைமைகளாக உருவாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்ததில்தான்  அமித்ஷா,தமிழர் பிரதமராக வேண்டும் என்பதைச்  சொல்லி இருக்கின்றார் எனவும், மோடி பிரதமர்   இல்லை என அமித்ஷா சொல்லவில்லை எனவும்  

ராஜாஜி, காமராஜ், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம்  போலத் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் இருந்து  வரும் சூழல்  இல்லை என்பதையே அமித்ஷா  குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார் எனவும்,
மோடி பிரதமர்  இல்லையா என்று சொல்வது அபத்தமானது எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe