கோவையில் இரவில் நடந்த இளையராஜாவின் இசை விருந்து

published 2 years ago

கோவையில் இரவில்  நடந்த இளையராஜாவின் இசை விருந்து

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை : கொடிசியாவில்   இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ்  கலந்து கொண்டு இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் மக்களுக்கு இன்னிசை விருந்தை வழங்கிய இளையராஜா, பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

கலைஞர் கருணாநிதி எனக்கு  தந்தைக்கு சமம். இளையராஜா என்ற பெயரை நான் வைக்கவில்லை,  எனது தந்தை வைத்த ஞானதேசிகன் என்ற பெயரை மாற்றி இசையுடன்  சேர்ந்து கொண்டு எனக்கு கருணாநிதி அளித்த பெயர் தான் இசைஞானி

அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர் தான் கலைஞர். அவர் வழியிலேயே முதல்வரும் நாட்டை வழி நடத்தி செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மக்களை முன்னேற்ற  ஏராளமான பணிகள் செய்தவர் கருணாநிதி. அந்த பாதையில் நம்முடைய முதல்வர் செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்வதையெல்லாம்   எனக்கு செய்து வருவதாக ஏற்றுக்கொள்கிறேன். எனக்கென்று நான் இது வேண்டுமென்று யாரிடமிருந்து எதுவும் கேட்கமாட்டேன்.

தமிழக மக்களை முன்னேற்ற கலைஞர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு தெரியும். அவரது வழியில் சென்று கொண்டிருக்கிற முதல்வரும் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார்.

என்னுடைய பிறந்த நாளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் எஸ்.பி.பி.,க்கு பிறந்தநாள் வருகிறது. நான் பிறந்த பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நானும் எஸ்.பி.பி.,யும் மூகாம்பிகை திருக்கோவிலுக்கு சென்றிருந்தோம். இப்போது அவர் இல்லை. அவருடைய மகன் இருக்கிறார். மகன்கள் என்னுடைய கச்சேரியில் பாட ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இசை நிகழ்ச்சியில் இளையராஜா உருவம் படைத்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. விரைவில் விற்பனைக்கு வரும் என மேடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe