நான் திருப்பி அடிச்சா.., உங்களால தாங்க முடியாது! கோவையில் திமுக-வினர் பரபரப்பு போஸ்டர்

published 1 year ago

நான் திருப்பி அடிச்சா.., உங்களால தாங்க முடியாது! கோவையில் திமுக-வினர் பரபரப்பு போஸ்டர்

கோவை: அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 3 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், இன்று மாலை கோவை சிவானந்த காலனியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மூத்த நிர்வாகிகள், வீரமணி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில், கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவி-னர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் "திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை..." எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய "எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது" என ஒன்றிய அரசை குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe