2 ஆண்டுகளாக குறட்டைவிடும் கோவை வ.உ.சி பூங்கா.. எங்கப்பா போவாம் நாங்க..?

published 1 year ago

2 ஆண்டுகளாக குறட்டைவிடும் கோவை வ.உ.சி பூங்கா.. எங்கப்பா போவாம் நாங்க..?


கோவை: கோவை மாநகர மக்களின்

பிரதான பொழுதுபோக்கு மையமாக காந்திபுரம் நேரு மைதானம் அருகேயுள்ள 'வஉசி உயிரியல் பூங்கா' இருந்தது. இந்த பூங்கா ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் இருந்தன.
பின்னர், பராமரிப்பதில் சிரமம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட வெவ்வேறு பூங்காக்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. தற்போது பூங்காவில் குரங்கு, நரி,மான் உள்ளிட்ட விலங்கினங்கள், பெலிகன், வாத்து, ஈமு, கிளிகள் உள்ளிட்ட

பறவையினங்கள், முதலை, பாம்புகள் என 500-க்கும்மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பூங்கா வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட

 

உயிரினங்களை பார்வையிடவும்,

மரங்கள் உள்ளன. பூங்காவில் உள்ள பசுமையான சூழலை அனுபவிக்கவும் தினமும் ஏராளமானோர் இந்த பூங்காவுக்கு வந்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பூங்காவுக்கான உரிமம் மத்திய வனஉயிரின ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொருமுறையும் உரிமத்தை புதுப்பிக்கும் போதுஆணையம் சார்பில்

வன விலங்குகளுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை செய்ய பூங்கா நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்கள்

வழங்கப்பட்டன. அவை

பின்பற்றப்படாததால், கடந்த இரண்டு

ஆண்டுகளுக்கு முன்னர் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.
இதனால் உரிமம் காலாவதியானது. சமூக செயல்பாட்டாளர்ராஜ்குமார் கூறும் போது,"கோவை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமான உயிரியல் பூங்கா முன்பு எப்படிக் காணப்பட்டதோ அதே போன்ற சூழலை மீண்டும் ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சூழலில், இப்பூங்காவை

பறவைகள் பூங்காவாக மாற்றம் செய்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கான

நடவடிக்கையையாவது மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்த வேண்டும்," என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe