விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது!..

published 1 year ago

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது!..

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான உற்பத்திகுழு கூட்டம் காலை 9.30 மணியளவிலும் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்க உள்ளது.

இதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

விவசாயிகள் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe