பா.ஜ.க உறுப்பினர் உமா கார்க்கியிடம் கோவை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

published 1 year ago

பா.ஜ.க உறுப்பினர் உமா கார்க்கியிடம்  கோவை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கோவை: திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்திருந்தார்.

 இந்த புகாரில், ‘‘ கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பாஜக உறுப்பினர் உமா கார்த்திகேயன் என்பவர் உமா கார்க்கி என்ற பெயரில் டுவிட்டர் உட்பட பல்வேறு சமூக வலைதள பக்கத்தில் திமுகவினர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். 

குறிப்பாக இவர் காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்களில் பெரியார் மற்றும் மணியம்மை குறித்து தவறாக சித்தரித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். 

சமீபத்தில் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். 

எனவே திமுக தலைவர், பெரியார் உள்ளிட்டவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வரும் உமா கார்க்கியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என தெரிவித்திருந்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டது.  

சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல்,  தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உமா கார்க்கியை  கைது செய்தனர். இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இவர் கோவை  காளப்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிறந்த சமூக ஊடக செயல்பாட்டாளர் என விருது பெற்றார். 

உமா கார்க்கி விருது பெற்ற சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. உமா கார்க்கியை 2 நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். கோவை ஜே.எம் எண் 4 கோர்ட்டில் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.

 நீதிபதி 4 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். நேற்று மாலை விசாரணை முடிந்து உமா கார்க்கியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குறைந்த நேர அவகாசத்தால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை.

 மேலும் ஒரு நாள் கஸ்டடி விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என போலீசார் கேட்டனர். கோர்ட்டில் இன்று ஒரு நாள் வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை தொ

டர்ந்து உமா கார்க்கியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உமா கார்க்கியின் பதிவுகள், அவரின் பின்னணியில் உள்ள அமைப்பு, சர்ச்சை கருத்துக்கள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe