பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை கலை கட்டியது 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.

published 1 year ago

பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை கலை கட்டியது 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.

கோவை  : தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். 

இங்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள். நேற்றும் வழக்கம் போல சந்தை கூடியது. 

வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 

ஆடுகளை வாங்குவதற்கும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. 

ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

 ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe