வெள்ளலூர் கிடங்கில் 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்க முடிவு

published 1 year ago

வெள்ளலூர் கிடங்கில் 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்க முடிவு

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் தினமும் குப்பைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை தரம் பிரிக்கப்படாத சுமார் 8.5 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மேலும் 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஹோட்டல்கள், சிறிய அளவிலான உணவு கடைகள் போன்றவைகளும் அடங்கும். மாநகராட்சியின் 100 வார்டுகளில் இருந்தும் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இக்கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்தது. இதில் பயோமைனிங் திட்டத்தின் முதல் கட்டத்தில் 9 லட்சம் கியூபிக் மீட்டர் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை அழிக்க திட்டமிடப்பட்டு அதில் 8.5 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் 45 ஏக்கர் நிலம் குப்பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே குப்பைக்கிடங்கில் மீதம் உள்ள 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்கப்பட உள்ளன.

 

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியதாவது: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மீண்டும் ரூ.60 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பயோ மைனிங் மூலம் மீதம் உள்ள 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளன,’’ என்றார்.

___

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe